Problems faced by graduate teachers who recruited without indicating their subject category in the Tamil medium schools in Eastern Province of Sri Lanka

இலங்கை கிழக்கு மாகாண தமிழ்மொழிப் பாடசாலைகளில் பாட வகுதி குறிப்பிடப்படாது பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

Authors

  • Mohamed Ussanar Mohamed Safeer Teacher, BT/BC/Kernynagar Madeena Vidyalaya, Vahaneri, Sri Lanka
  • Fareed Mohamed Nawastheen Senior Lecturer, Faculty of Education, The Open University of Sri Lanka

Keywords:

பாட வகுதி, பட்டதாரி ஆசிரியர் நியமனம், ஆசிரியர்களின் தொழில் திருப்தி, இலங்கை கிழக்கு மாகாணம், Subject category, Recruitment of graduate teachers, Job satisfaction, Eastern Province of Sri Lanka

Abstract

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழ்மொழிப் பாடசாலைகளில் பாட வகுதி குறிப்பிடப்படாது பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கண்டறிவதை நோக்காகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கோறளைப்பற்று மேற்கு கோட்டத்தில் கற்பிக்கும் இவ்வகை நியமனம் பெற்ற ஆசிரியர்களுள் எளிய எழுமாற்று மாதிரி அடிப்படையில் 8 ஆண் ஆசிரியர்களும் 5 பெண் ஆசிரியைகளுமாக 13 ஆசிரியர்கள் இவ் ஆய்வுக்கான மாதிரிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர். அரை கட்டமைக்கப்பட்ட நேர்காணல் (Semi structured interview) மூலம் சேகரிக்கப்பட்ட பண்புசார் தரவுகள் கருப்பொருள் சார் பகுப்பாய்வு நுட்பமுறை மூலம் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. பாட வகுதி குறிப்பிடப்படாமல் பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நிருவாக ரீதியாக, மனவெழுச்சி ரீதியாக மற்றும் கற்பித்தல் ரீதியாகப் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் என இவ்வாய்வின் கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்துகின்றன. பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கப்படும்போது, பாட வகுதி கண்டிப்பாகக் குறிப்பிடப்பட வேண்டும் என்றும், பாட வகுதி குறிப்பிடப்படாமல், பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு, அவர்களுக்கான பாட வகுதி குறிப்பிடப்பட்டு, நியமனக் கடிதம் வழங்கப்பட வேண்டும் என்றும், இவ் ஆசிரியர்களது தொழில் திருப்திக்கான சாத்தியப்பாடுகள் இனங்காணப்பட்டு அவை துரிதமாகவும் முறையாகவும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் இவ் ஆய்வு பரிந்துரை செய்கின்றது.

[The study aimed at identifying the problems faced by Graduate Teachers who recruited without indicating their subject category in the Tamil medium schools in Eastern Province of Sri Lanka. Using a simple random sampling technique, a total number of 13 teachers which consisted of 8 male teachers and 5 female teachers from the population of graduate teachers in the educational division of Koralai Pattu West in eastern province in Sri Lanka, was selected for the study. The study was employed qualitative approach and a semi structured interview schedule was used to collect data. Collected data was analyzed using a thematic technique. Based on the analysis of the data, it was found that many teachers were not satisfied with their teaching and faced problems in terms of administrative, emotional and teaching subjects in the schools. Therefore, it was recommended to recruit graduate teachers with mentioning their teaching subject category in order to make them satisfaction in their teaching.]

References

Ansar, A. L. M. (2016). Is there a Solution for the Grievances of Eastern Province Graduated Teachers? (கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களின் அவலநிலைக்கு தீர்வு கிடைக்குமா?). Battinews.com

Hattie, J. (2009). Visible learning: A synthesis of over 800 meta-analyses relating to achievement. London: Routledge.

Salem, Mohammad. (2011). The Classroom Problems Faced Teachers at the Public Schools in Tafila Province, and Proposed Solutions. Tafila, Jordan: Faculty of Education, Tafila Technical University.

Udoba, Alexander. (2014), Challenges faced by teachers when teaching learners with developmental disability. University of Oslo: Department of Special Needs Education, Faculty of Educational Sciences.

Mayaru. M. O. (2015). The challenges facing the public primary school teachers in their teaching career in Tanzania. Tanzania: Open University of Tanzania.

Cecilia, Boakye. (2017). Challenges and solutions: The experiences of newly qualified science teachers. Cape Coast, Ghana: Institute of Education, University of Cape Coast.

Ali, M. (2010). Impact of emotions on employee’s job performance. Pakistan: COMSATS Institute of Information Technology Wah Cantt.

Linda, Evans. (2010). New theoretical perspectives on job satisfaction and motivation: Challenging herzberg and linking with professional development. University of Leeds, UK: School of Education.

Published

2019-10-03
Statistics
Abstract Display: 419
PDF Downloads: 3567

Issue

Section

Original Articles

How to Cite

Mohamed Safeer, M. U. ., & Mohamed Nawastheen, F. . (2019). Problems faced by graduate teachers who recruited without indicating their subject category in the Tamil medium schools in Eastern Province of Sri Lanka: இலங்கை கிழக்கு மாகாண தமிழ்மொழிப் பாடசாலைகளில் பாட வகுதி குறிப்பிடப்படாது பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் . Muallim Journal of Social Sciences and Humanities, 3(4), 379-397. https://doi.org/10.33306/mjssh/42