Piriṭṭiṣ kālaṉiya āṭciyiṉpōtu Malāyāvāḻ Tamiḻc camutāyam aṭainta mēlātikkanilai [The hegemonism on Tamil community during the British colonial rule]
பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின்போது மலாயாவாழ் தமிழ்ச் சமுதாயம் அடைந்த மேலாதிக்கநிலை
Keywords:
oriantalism, hegemonism, East India Company, kangani system, contract system, postcolonial theory, கீழ்த்திசைவாதம், மேலாதிக்கம், கங்காணி முறை, ஒப்பந்த முறை, பின்காலனியம், கிழக்கிந்திய நிறுவனம்Abstract
Malaya was under colonial rule by the British at the beginning of the industrial revolution in the world. Rubber was considered an essential commodity for the car industry. The UK government approached East India Company entrepreneurs and advised them to set up rubber plantations in Malaya. Those suggestions were accepted and arrangements were made for deforestation in order to plant rubber trees throughout Malaya. The locals retreated to do the work. On the advice of the British rulers, South Indian Tamils were brought to Malaya by the kangani system and by contract system and settled in rubber plantations. The Tamil people destroyed the jungles surrounding Malaya and planted rubber trees. Later, they were hired as rubber tapper in rubber plantations. The Tamil people who worked in this way suffered from the British investors, the Sri Lankan Tamils who worked as plantation managers and the non-Tamil Indians who worked as clerks. C.Vadivelu, a senior Malaysian Tamil writer, has made clear through his short stories the cruelty of the hegemonism of British investors. His three collections of short stories are considered as the primary sources of this study and the historical references of Malaysia as supporting sources of the study. Data collected from short stories have been analyzed based on postcolonial theory. This study reveals the fact that the Malay Tamil people were sociologically and economically dominated by the British colonial rulers.
[உலகில் தொழிற்புரட்சி தொடங்கிய காலக்கட்டத்தில் மலாயா பிரிட்டிஷ்காரர்களின் காலனிய ஆட்சியின்கீழ் இருந்தது. கார் தயாரிப்புத்துறைக்கு ரப்பர் அத்தியாவசியப் பொருளாகக் கருதப்பட்டிருந்தது. இங்கிலாந்து அரசு கிழக்கிந்திய நிறுவனத் தொழில் முனைவர்களை அணுகி, மலாயாவில் ரப்பர் தோட்டங்களை நிறுவ ஆலோசனை வழங்கியது. அந்த ஆலோசனைகள் ஏற்கப்பட்டு மலாயா நாடெங்கும் ரப்பர் மரங்கள் நடும் பொருட்டு காடுகள் அழிக்க ஏற்பாடுகள் நிகழ்ந்தன. உள்ளூர் மக்கள் அவ்வேலைகளைச் செய்யப் பின்வாங்கினர். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் ஆலோசனையின்பேரில் தென் இந்தியத் தமிழர்கள் கங்காணி முறையிலும், ஒப்பந்த முறையிலும் மலாயாவுக்குத் தருவிக்கப்பட்டு ரப்பர் தோட்டங்களில் குடியமர்த்தப்பட்டனர். மலாயாவை சூழ்ந்திருந்த பெருங்காடுகளை அழித்து ரப்பர் மரங்களைத் தமிழ் மக்கள் நட்டு வளர்த்தனர். பின்னர், ரப்பர் தோட்டங்களில் பால்மரம் சீவும் தொழிலாளிகளாக அவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். அவ்வாறு வேலை செய்த தமிழ் மக்கள் பிரிட்டிஷ் முதலாளிமார்களாலும், தோட்ட மேலாளராகப் பணிசெய்த இலங்கைத் தமிழர்களாலும், எழுத்தர் (கிராணி) பணி செய்த தமிழர் அல்லாத பிற இந்திய மக்களாலும் அவதிகள் அடைந்துள்ளனர். பிரிட்டீஷ் முதலீட்டாளர்களின் மேலாதிக்கத்தின் கொடுமையினை மலேசியாவின் மூத்த எழுத்தாளர் சி.வடிவேலு அவர்கள் தனது சிறுகதைகளின்வழி நன்கு உணர்த்தியிருக்கின்றார். அன்னாரின் மூன்று சிறுகதைத் தொகுப்புகள் இந்த ஆய்வின் முதன்மை ஆதாரங்களாகவும் மலேசிய நாட்டின் வரலாற்றுக் குறிப்புகள் ஆய்வின் துணை ஆதாரங்களாகவும் கொள்ளப்பட்டு உள்ளன. சிறுகதைகளில் இருந்து திரட்டப்பட்ட தரவுகள் பின்காலனிய கோட்பாட்டின் அடிப்படையில் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாய்வின்வழி மலேயாவாழ் தமிழ் மக்கள் பிரிட்டீஷ் காலனிய ஆட்சியாளர்களால் சமூகவியல் மற்றும் பொருளாதார ரீதியில் மேலாதிக்கத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் என்ற உண்மை கண்டறியப்பட்டுள்ளது.]
References
Karnal Singh Sandhu (1969). Indians in Malaya. Cambridge: The Universiti Press.
Ramasamy, P. (1999). Malaysia Thotddat Tolilaalargal; Vaalvum Phoraatdanggalum. Kuala Lumpur: Sembaruthi Publication.
Janagi Raman Manikkam (2008). The Malaysian Indian Dilemma. Kuala Lumpur: Janagi Raman Publication.
Jain Ravindra, K. (1970). South Indians on Plantation Frotier in Malaya. New Haven: Yale University Press.
Vadivel, S. (1970). Iruṇṭa ulakam [Dark world]. Seremban: Barathi Publication.
Kalaimuthu, K (2008). Malēciya intiyarkaḷ [Malaysian Indians]. Kuala Lumpur: Tamil Sangam of Malaysia
Vadivel, S. (1981). Putiya pātai [New path]. Seremban: Barathi Publication. Retreived from https://jan.ucc.nau.edu/~sj6/Spivak%20CanTheSubalternSpeak.pdf
Published
PDF Downloads: 591