Pattuppāṭṭil aḷapeṭai vaṭivaṅkaḷ [Alapedai format in pattupaddu poem]
பத்துப்பாட்டில் அளபெடை வடிவங்கள்
Keywords:
Melody, Rhyme, Metre, Feelings and deeds, செய்யுளிசை, இன்னிசை, அளபெடை, அகம், புறம், பத்துப்பாட்டுAbstract
The Sangam literature provides very valuable information on the social, economic and political life of the Tamil society. Sanga kaalam (Sangam age) is considered to be the Golden Age of Tamil Literature. The study aims to collect and quantify the scales found in the decimal texts and to classify their types such as verbal, melody, and verbal scales, to distinguish the scales from the following places first, middle, and last, and to look at the measurements at the high level and to identify and measure the measurements in the decimal. The Ten Idylls, known as Pattuppāṭṭu or Ten Lays, is an anthology of ten longer poems in the Sangam literature – the earliest known Tamil literature. They range between about 100 and 800 lines, and the collection includes the celebrated Nakkīrar's Tirumurukāṟṟuppaṭai (lit. "Guide to Lord Murukan"). The collection was termed as "Ten Idylls" during the colonial era, though this title is considered "very incorrect" by Kamil Zvelebil – a scholar of Tamil literature and history. He suggests "Ten Lays" as the more apt title. Five of these ten ancient poems are lyrical, narrative bardic guides (arruppatai) by which poets directed other bards to the patrons of arts such as kings and chieftains. The others are guides to religious devotion (Murugan) and to major towns, sometimes mixed with akam- or puram-genre poetry.
[சங்க இலக்கியம் பல செல்வங்களை அள்ளிக் கொடுத்துள்ளது. அது சமூகம், பொருளியல் மற்றும் அரசியல் பற்றி அறிந்துகொள்வதாகும். சங்க காலம் என்பது தமிழர்களின் பொற்காலம் எனலாம். பத்துப்பாட்டு நூல்களில் காணலாகும் அளபெடைகளைச் சேகரித்து வகை தொகை செய்து அதன் வகைகளான செய்யுளிசை, இன்னிசை, சொல்லிசை அளபெடைகளை வகை தொகை செய்தலும், அளபெடைகள் பயின்று வரும் இடங்களான முதல், இடை, கடை எனப் பிரித்து அறிதலும் மேலும் தொடை நிலையில் அளபெடையினைப் பார்த்து அளபெடை விகற்பங்களைப் பத்துப்பாட்டில் கண்டறிந்து ஆய்வு செய்வதாகவும் இவ்வாய்வு அமையப் பெற்றுள்ளது. பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் இன்று ஒரே தொகுப்பாகக் குறிப்பிடப்படுகின்ற போதிலும், இவை ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை. வெவ்வேறு ஆசிரியர்களால் பல்வேறு கால கட்டங்களில் இயற்றப்பட்டவை. பத்துப்பாட்டு எனச் சேர்த்துக் குறிப்பிடும் வழக்கமும் பிற்காலத்தில் எழுந்ததென்பதே பலரது கருத்து. இந்த அரிய தொகுப்புக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார்.]
References
Ilampuranar. (1969). Tholkappiyam. Thanjaur: Karandai Pulavar College.
Thirugnanasampandam, S. (2006). Nannol – Ezhuthu [Nanool - orthography]. Thiruvaiyaru: Kathir Pathipakam.
Swaminathaiyar. (1974). Pathupattu. Thiruvanmiyur: Dr.U.Ve. Swaminathaiyar Book House.
Govindarasa mudaliyar. Neminatham. Thirunelveli: Saiva Sithanda Noor Pathipu Kazhagam.
Gopalaiyar. (1990). Ilakkana kothu [Tamil Grammar]. Thanjaur: Saraswathi Mahal Noolagam.
K. Sarveswaran, Dias and Butt. (2018). "ThamizhiFST: A Morphological Analyser and Generator for Tamil Verbs," 3rd International Conference on Information Technology Research (ICITR), 2018, pp. 1-6, doi: 10.1109/ICITR.2018.8736139.
Schiffman. (1998). Standardization or Restandardization: The Case for "Standard" Spoken Tamil. Language in Society, 27(3), 359-385. Retrieved June 13, 2021, from http://www.jstor.org/stable/4168850
Published
PDF Downloads: 357