Caṅka ilakkiyattil vāṉiyal [Astronomy in Sangam literature]
சங்க இலக்கியத்தில் வானியல்
Keywords:
Rain, Tamil sangam, Sangam Literature, Land, Space, Thirukural, மழை, தமிழ்ச்சங்கம், சங்க இலக்கியங்கள், நிலம், வான், திருக்குறள்Abstract
Tamil science is the knowledge that has traditionally been developed, used and explained scientifically by Tamils. It also refers to the contribution that Tamil is making to science today. Tamil science is found in many fields such as linguistics, medicine, architecture, agriculture, biology, mathematics and astronomy. It is noteworthy that the Tamils who had various technologies also had the basic science for it. Sangam literature is interspersed with versatile messages. Admired as world literature, it contains news from a variety of disciplines. It is known that the Sangam periodicals became versatile due to this. Many world scholars have studied and praised the astronomical news found by the Tamils. Tamils refer to those who know astronomy as 'virgins'. Literary evidence also suggests that the computer predicts time with the motions of a planet orbiting in the sky. The literature is a testament to the fact that Tamils are the ones who know the scientific method of measuring the planets and atmospheres of the sky, their movements and time scales. The Sangam poets knew that there were various planets and galaxies in the sky. News about the Sun, Earth, Jupiter, Mercury, Venus, Saturn, and the satellite Moon is found in the association songs. News about dental galaxies has also been reported in Sangam literature. It is also possible to know that the Tamils who guided the polar fish at night knew the four directions during the day with the help of the sun.
[தமிழர் அறிவியல் என்பது பாரம்பரியமாக தமிழர் விருத்தி செய்த, பயன்படுத்திய, அறிவியல் நோக்கில் விளக்கப்படக்கூடிய அறிவையும், தற்காலத்தில் தமிழர் அறிவியலுக்கு வழங்கும் பங்களிப்பையும் குறிக்கும். மொழியியல், மருத்துவம், கட்டிடக்கலை, வேளாண்மை, உயிரியல், கணிதம், வானியல் என பல துறைகளில் தமிழர் அறிவியல் உண்டு. பல்வேறு தொழிநுட்பங்களைக் கொண்டிருந்த தமிழர் அதற்கான அடிப்படை அறிவியலையும் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சங்க இலக்கியங்கள் பல்துறை செய்திகளைக் கொண்டு விளங்குகின்றன. உலக இலக்கியங்கள் என்று போற்றத்தக்க வகையில் அவற்றில் பற்பல துறைகள் சார்ந்த செய்திகள் காணப்படுகிறது. குறிப்பாக வானியல் பற்றிய பல குறிப்புகளையும் வானியல் நிகழ்வுகள் பற்றிய பல செய்திகளையும் சங்க இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. சங்க காலப்புலவர்கள் இதன் காரணமாக பல்துறை அறிவு சார்ந்தவர்களாக இலங்கினர் என்பதை அறியமுடிகிறது. தமிழர் கண்டறிந்த வானியல் செய்திகளை உலகப் பேரறிஞர் பலர் ஆய்வு செய்து பாராட்டியுள்ளனர். தமிழர், வானியலை நன்கறிற்தோரைக் ‘கணியர்’ என குறிப்பிட்டிருக்கின்றனர். வானில் வலம் வரும் கோளின் அசைவுகளைக் கொண்டு காலத்தைக் கணித்து நன்மை தீமைகளைக் கூறுபவராகக் கணியர் திகழ்ந்துள்ளனர் என்பதையும் இலக்கியச்சான்றுகள் எடுத்துரைக்கின்றன. விண்ணின் கோள்களையும் காற்றுமண்டலத்தையும் அவற்றின் இயக்கங்களையும் கால அளவுகளையும் அளந்திட்டறியும் அறிவியல் முறையை அறிந்தவர்கள் தமிழர்கள் என்பதற்கான சான்றாக இலக்கியங்கள் விளங்குகின்றன. வான மண்டலத்தில் பல்வேறு கோள்கள் விண்மீன்கள் விளங்கியுள்ளன என்பதைச் சங்கப் புலவர்கள் அறிந்திருந்தனர். சூரியன், பூமி, வியாழன், புதன், வெள்ளி, சனி போன்றன பற்றியும், துணைக்கோளான திங்கள் கோள் பற்றிய செய்திகள் சங்கப் பாடல்களில் காணப்படுகின்றன. பற்பல் விண்மீன்களைப் பற்றிய செய்திகளும் சங்க இலக்கியங்களில் பதிவாக்கப் பெற்றுள்ளன. இரவுப் பொழுதில் துருவ மீனைக் கொண்டு திசையறிந்த தமிழர் பகலில் நான்கு திசைகளையும் கதிரவன் துணை கொண்டு அறிந்தனர் என்பதையும் அறிந்துகொள்ளமுடிகிறது.]
References
Ilampuranar. (2004). Tholkapiyam (poruḷatikāram). Chennai: Kaḻaka Veḷiyīṭu.
Subramanian. (2010). Caṅka ilakkiyam eṭṭuttokai (akam-puṟam) [Sangam Literature (Feeling and deeds)]. Chennai: Manivasakkar Publishing House.
Subramanian. (2010). Akanāṉūṟu [Akananuru]. Chennai: Maṇivācakar Patippakam.
Tatchinamoorthy. (2011). Paḻantamiḻar nākarikamum paṇpāṭum [Earliest civilization and culture of Tamils]. Chennai: Aintiṇaippatippakam.
Neugebauer. (1952). Tamil Astronomy: A Study in the History of Astronomy in India. Osiris, 10, 252-276. Retrieved June 14, 2021, from http://www.jstor.org/stable/301816.
Asko Parpola. (2014). Beginnings of Indian and Chinese Calendrical Astronomy. Journal of the American Oriental Society, 134(1), 107-112. doi:10.7817/jameroriesoci.134.1.0107.
Daugherty. (2019). Dante and the Early Astronomer: Science, Adventure, and a Victorian Woman Who Opened the Heavens. New Haven; London: Yale University Press. doi:10.2307/j. ctvfc5277
Published
PDF Downloads: 202