Cittarkaḷiṉ vaḻipāṭṭu muṟaikaḷ [Worship methods of the siddhars]
சித்தர்களின் வழிபாட்டு முறைகள்
Keywords:
Siddhars, Worship, Society, Meditation, Yoga, Body, சித்தர்கள், வழிப்பாடு, சமுதாயம், தியானம், யோகா, உடல்Abstract
The Siddhars are the ones who know the true state of Enbor. They believe that lord is the true form. These are called meditation yoga without looking out for him the Siddhars are the ones who find the way inside the body and worship. The Siddhars have sung to eradicate the stereotypes that exist in the Society and give advice to the people out of concern for social welfare. At first they suffered and plowed into it, and beyond it they found pleasure. The pleasure that comes from suffering is the best. The vision of pleasure first and then suffering is the worst, the Siddhas are the ones who know themselves completely. There are three divisions of Siddhars namely Kaya siddhar, Gnana Siddhar and Sanmarka Siddhar.
[சித்தர்கள் என்போர் உண்மை நிலையை அறிந்தவர்கள் ஆவர். இறைவன் உண்மை வடிவினனாக இருக்கின்றான். அவனை வெளியே தேடாமல் தியானம் யோகம் என்று இவற்றின் வழி உடம்புக்குள்ளே கண்டு வணங்கியவர்கள் சித்தர்கள். சமூக நலனில் அக்கறை கொண்டு சமூகத்தில் நிலவும் மூடப்பழக்கவழக்கங்களையும் ஒழிக்கும் விதமாகவும், மக்களுக்கு அறிவுரை புகட்டும் விதமாகவும் சித்தர்கள் பாடியுள்ளனர். முதலில் துன்பப்பட்டு அதில் உழன்று, அதைக் கடந்து அவர்கள் இன்பத்தைக் கண்டனர். துன்பத்தில் இருந்து வரும் இன்பம்தான் சிறந்தது. முதலில் இன்பம் பிறகு துன்பம் என்கிற நோக்கு மிகக் கொடியது, சித்தர்கள் முற்றிலுமாக தன்னை அறிந்தவரகள். சித்தர் வாழ்க்கையில் உள்ளம் கோயில்! ஊனுடம்போ ஆலயம் எனத் தெளிந்தவர்கள் ஆலயமாகிய உடம்பை எப்படி வைத்துக் கொள்ள வேண்டுமோ அப்படியெல்லாம் வைத்துக் கொள்ளத் தெரிந்தவர்கள். கூடுவிட்டுக் கூடு பாயும் சக்தியைப் பெற்றவர்கள் காய சித்தர், ஞான சித்தர், சன்மார்க்கச் சித்தர் என சித்தர்கள் மூன்று பிரிவினர் ஆவர். சித்தர்கள் உருவ வழிபாடும், தேர் திருவிழாவும் சமய அடிப்படைக்குப் புறம்பானவை என்றனர். குற்றமற்ற மனம், ஒழுக்கம், நற்பணி, தவம், ஞானம் இவற்றையே தங்கள் பாடல்களில் வலியுறுத்தி கூறுகின்றனர். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு நெறிகளும் இறைவனின் திருவருளை அடைவதற்குரியன. இவற்றுள் ஞானநெறியில் ஒழுகுபவரக்ள நான்கு நெறிகளுக்கும் உரியவராகிறார். சித்தர்கள் பேரண்டத்தையே பொருளாகக் கண்டவர்கள். பொருளின் சிவத்தையும் சக்தியையும் கண்டவர்கள். உருவ வழிபாட்டை அறிவற்ற செயல் என்றனர். அவர்களிடையே பகுத்தறிவின் முனைப்பைக் காணலாம். மனதிற்கு உள்ளே மனதிற்கு உறுபொருளைக் கண்ட சித்தர் பெருமக்களின் வழிபாட்டு நெறி குறித்து இக்கட்டுரை அமைகிறது.]
References
Ilamunaivar Tamilpriyan. (2016). Siddharkal Padalkal moolamum uraium, [Source and commentatary of Sidhar songs] Karpagam puplications, Thiyagaraya nagar Chennai.
Gomathinayagam, E. (2016). Siddhar Kattum valviyal kalvi, [Life education shown by siddar’s] Santha publications, Rayapettai, Chennai.
Kannan Muthiah, Kiruthiga Ganesan, Manickam Ponnaiah, Sathiyarajeswaran Parameswaran. (2019). Concepts of body constitution in traditional Siddha texts: A literature review, Journal of Ayurveda and Integrative Medicine,Volume 10, Issue 2, Pages 131-134.
Anand Ganapathy, Alaganandam Kumaran, Lekha. (2020). Prevention of COVID 19 - Siddha perspective, International Journal of Ayurvedic Medicine, Vol 11 (4), Pages 594-615.
Abinaya., Vijaya Nirmala., Saravana Devi., Karolin Daisy Rani. (2019). Science behind the Siddhar’s with the Research Evidences of Kayakarpam (Antioxidant Property) in Siddha Formulations – A Current Status.Vol.:15, Issue:1. Pages.149-168.
Sathiyarajeswaran, Shree Devi. (2019). Siddar (Siddha Initiative for Documentation of Drug Adverse Reaction): Android Mobile App for AYUSH Pharmacovigilance Programmes: An Efficient and Easy Way of Assessing ADR.Journal of Pharmacovigilance and Drug Safety.Vol 16 No 2. Pages4-7.
Negi Vineeta Kumari, Parvat Susheela, Vyas Anju, Sharma Om, Sharma. (2018). MARMA AND MARMA THERAPY: A REVIEW, World Journal of Pharmaceutical Research.Volume 7, Issue 15, 258-271.
Published
PDF Downloads: 1013