A study on adaptation of Tamil novels in Tamil cinema [தமிழ் நாவல்களைத் தழுவி உருவாக்கப்படும் தமிழ்த் திரைப்படங்கள் ஓர் ஆய்வு]

Authors

  • Kanesan, R. Teachers’ Activity Center, Gopeng, Perak, Malaysia

Keywords:

Novel, cinema, adaptation

Abstract

திரைப்படம் என்பது காட்சிகளான ஒரு படைப்பாகும். தமிழ் இலக்கிய உலகில் சிறந்த பல நாவல்கள் புனையப்பட்டுள்ளன. அதே போல தமிழ்த்திரைப்பட உலகில் பல சிறந்த திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப வளர்சியால் எழுத்து வடிவத்தில் உள்ள நாவல்கள் திரைக்காட்சிகளாக மாற்றம் பெறும் போது எவ்வகையில் வாசகர்களின் அல்லது பார்வையாளர்களின் கவனத்தை  இம்மாற்றம் ஈர்க்கிறது என்பதை ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும். நாவலை வாசிக்கும்போது ஒரு வாசகன் உணர்ந்து கொள்ளும் பிம்பங்கள் முற்றிலும் அவனது கற்பனை உலகத்துக்கு உட்பட்டவை. ஒவ்வொரு வாசகரும் ஒரு நாவலில் சொல்லப்பட்டுள்ள காட்சிகளை அவரவர் கற்பனைத்திறனுக்கேற்ப உருவாக்கிக் கொள்கிறார்கள். நாவலை வாசிக்கும்போது, ஒன்றைக் காட்சிப்படுத்திக் கொள்ள நமக்கு எந்தவித தடைகளும் இல்லை. அதே வேளையில், ஒரு நாவலை நாம் குறிப்பிட்ட நேரத்திற்குள் வாசித்து முடிக்க வேண்டும் என்கிற கட்டுப்பாடும் இல்லை. ஆனால் ஒரு திரைப்படம் என்பது குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு கதையைப் பார்வையாளனுக்கு அதன் உருவில் காட்ட  வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. நாவல் எனும் இலக்கியத்தில் காணப்படும் இயல்புகள், கோட்பாடுகள், தனித்துவங்கள் நிச்சயம் திரைப்படத்துடன் ஒப்பிட்டு ஆராயப்பட வேண்டும். எழுத்து வடிவம் கொண்ட நாவல் மற்றும் காட்சி வடிவத்தின் நகர்வுகளைக் கொண்ட திரைப்படங்களின் இயல்புகளை நாம் கண்டறிவது இவ்வாய்வின் நோக்கமாகும். காட்சிப் படிமங்கள் நாவலின் கருத்திற்குத் துணைபோகின்றனவா அல்லது அதை சிதைக்கின்றனவா போன்ற கேள்விகளுக்கு இவ்வாய்வின் மூலம் விடைக்காணப்படுகிறது. இறுதியாக இந்த ஆய்வில் இலக்கியமும், திரைப்படமும் இரண்டு வெவ்வேறு கலை ஊடகங்கள் என்பதைக் காண முடிகிறது.  அதே நேரத்தில் இவற்றில் சில ஒற்றுமைகளும் உள்ளன. ஒரு முறையான தழுவல் செயல்முறையுடன், ஒரு நல்ல நாவலைத் தரமான படமாக மாற்ற முடியும் என்பதில் ஐயமில்லை. வாசகர்களையும் பார்வையாளர்களையும் பொறுத்தவரை, தீவிர இலக்கியம் மற்றும் தரம் வாய்ந்த திரைப்படத்தின் உயர் மதிப்பீட்டின் முன்னேற்றத்தை அது மேம்படுத்தும்.

The novel is long written in text. The film is a visual artwork. Many novels have been invented in the Tamil literary world. Similarly, many Tamil films have been produced in the Tamil film industry. The purpose of this idea is to find the attention of the reader or the audience to the attention of the novels in the written form of the script by the technical development. The images that a reader realizes when reading the novel are completely subject to his fantasy world. Each reader has created scenes in a novel by their imagination. When we read the novel, we have no restrictions to display one. At the same time, there is no restriction on a novel we need to read and complete within the given time. But a film is forced to show a story within a given time in the image. The characteristics, theories, the distinctions in the literature of the novel should definitely be compared with the film. The need for this film is to find the nature of the films with the writing of the novel and the shape of the scene. The visuals are solved by answering questions such as whether or not they are distorted in the novel's idea. Finally, this study also indicates that literature and film are two different art mediums, and at the same time have some similarities. They are no doubt that with a proper adaptation process, a good novel can be adapted into an excellent quality film. Hopefully, this would enhance the progress of high appreciation of serious literature and quality film among readers and viewers.

References

Iswaran. (2017). Communications and regulations (தகவல் தொடர்புகளும் நெறிமுறைகளும்). Chennai: Saratha Publications.

Ramakrishnan, S. Beyond Images (காட்சிகளுக்கு அப்பால்). Chennai: Devasanthiri Publications.

Arun. (2013). Artists who Changed Tamil Cinemas Limits (தமிழ்ச் சினிமாவின் எல்லையை மாற்றியமைத்த கலைஞர்கள்). Cinema Vikadan. https://cinema.vikatan.com/tamil-cinema/news/41491.html

Umasanthiran. (2008). Thorns and Flowers (முள்ளும் மலரும்). Chennai: Amrutha Publications.

Pachan, T. (2007). Nine Rupee Note (ஒன்பது ரூபாய் நோட்டு). Thanjavur: Vijaya Publications.

Kamalhassan. (2017). Hey Ram Film (ஹேராம் திரைக்கதை). Chennai: Swapna Book House Publications.

Published

2018-07-09
Statistics
Abstract Display: 359
PDF Downloads: 226

Issue

Section

Original Articles

How to Cite

Kanesan, R. (2018). A study on adaptation of Tamil novels in Tamil cinema [தமிழ் நாவல்களைத் தழுவி உருவாக்கப்படும் தமிழ்த் திரைப்படங்கள் ஓர் ஆய்வு]. Muallim Journal of Social Sciences and Humanities, 2(3), 213-219. https://mjsshonline.com/index.php/journal/article/view/67