A study on medical references that are found in Tamil proverbs [தமிழ்ப் பழமொழிகளில் காணப்படும் மருத்துவக் குறிப்புகள் ஓர் ஆய்வு]
Keywords:
Tamil Proverbs, Tamil Medicine, Ayurvedic Medicine, HerbsAbstract
தமிழ்ப் பழமொழிகளில் காணப்படும் மருத்துவ குறிப்புகள் தொடர்பான ஓர் ஆய்வாக இஃது அமைந்துள்ளது. இது, பண்டைய காலத்தில் தமிழ் மக்களிடையே புலக்கத்தில் இருந்து வந்த மருத்துவக் குறிப்புகளை வெளிக்கொணரவும் தற்கால மக்களுக்கு எளிமையாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்க மேற்கொண்ட சிறு முயற்சியாகும். நமது முன்னோர்கள், சித்தர் பாடல்களிலும் ஓலைச் சுவடிகளிலும் மருத்துவக் குறிப்புகளை எழுதி வைத்திருந்தனர். அதனை மேன்மக்களால் மட்டுமே படித்துணரவும், பயன்படுத்தவும் முடிந்தது. அதே வேளையில் பாமர மக்களிடையே புலக்கத்தில் இருந்து வந்த வாய்மொழி இலக்கியமான பழமொழிகளில், மக்களுக்கான வாழ்க்கை குறிப்புகளும் பல அரிய மருத்துவக் குறிப்புகளும் அடங்கியிருந்தன. வாய்மொழி இலக்கியங்கள் பாமர மக்களால், பாமர மக்களுக்காக கூறப்பட்டது. மக்களின் மருத்துவம் தொடர்பானப் பிரச்சனைகளைத் தீர்க்க, அக்காலத்தில் பழமொழிகளைக் கருவியாகப் பயன்படுத்தினர். பழமொழிகள் சுருக்கமாகவும் எளிமையாகவும் அனைவராலும் புரிந்துகொள்ள கூடியதாகவும் இருந்ததால் பாமர மக்களின் வாழ்க்கைக்குப் பெருந்துணையாய் இருந்திருக்கிறது. பழமொழிகள் சுருக்கமான அமைப்பில் இருந்தாலும் அதன் கருத்துகள் மிக ஆளமானது. இஃது ஆண், பெண், சிறுவர், முதியவர் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் பொருந்தும் வகையில் அமைந்திருக்கும். ஆகவேதான் ஆய்வாளர் பழமொழிகளின் மூலமாக மருத்துவம் தொடர்பான கூறுகளையும் கருத்துகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டி இவ்வாய்வினை மேற்கொண்டார். இந்த ஆய்வில் குறிப்பிட்டுள்ள, “ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்” எனும் பழமொழியானது, ஆயிரம் வேர்களின் தன்மையை அறிந்த ஒருவனே பாதி வைத்தியனாகக் கருதப்படுவான் என்று உணர்த்துகிறது. தமிழ் மருத்துவமானது வேர்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது என்பதும் புலப்படுகிறது. தொடர்ந்து “பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்”, “நான்கு மிளகும் ஒரு வெத்திலையும் இருந்தால் பகைவன் வீட்டில் கூட உணவருந்தலாம்” என்ற இவ்விரண்டு பழமொழிகளும் மிளகு மற்றும் வெத்திலை நஞ்சை முறிக்கக்கூடிய மருத்துவத் தன்மையைக் கொண்டுள்ளன என்று நமக்கு விளக்குகின்றது. தமிழ் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பொருள்கள் யாவும் இயற்கையாகக் கிடைக்கக் கூடியவை மட்டுமல்ல, நம்மைச் சுற்றி உள்ளவையாக இருப்பதால் இதன் பயன்பாடும் அதிகமாக இருக்கிறது. இந்த ஆய்வு மலேசியத் தமிழர்கள் அனைவருக்கும் பெறும் பயனாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு ஆரம்பிக்கப்பட்டது.
This is a study that reviews the medical references found in the Tamil proverbs. It is a small attempt to reveal the medical references of the Tamil people in ancient times and to make it easier and clear to the common people. Our ancestors wrote medical notes on the songs and ‘chitra siddhars’. Only the nobles could read and use it. Not the common people. In the oral language of the literature, there were living references to the people and a number of rare medical references. The oral literature was composed for the commoners by the ordinary people. People used the proverbs as a tool to solve the problems of medicine. Evidence suggests that the proverbs are brief, simple and understandable, and the lives of the laureates have been great. Though the proverbs are in a brief setting, its concepts are very important. This is applicable to all. That is why the researcher made it possible to add to the masses and ideas about medicine through the proverbs. In this study, a person who knows the nature of a thousand roots will be considered a half-doctor and most medicinal properties are from these roots. The same goes for proverb on ‘pepper’ and etc. It explains the peculiarity of pepper in human life and its significance. The materials used in Tamil medicine are around us and we can hope that it’s very useful medicine for Malaysian Tamils.
References
Seminar Comittee, Bharathi Forum. (2011). Food lifestyles by literature (இலக்கியங்கள் காட்டும் உணவு முறை). Santha Publications.
Ministry of Health Malaysia. Malaysian National Cancer Registry Report (மலேசிய தேசிய புற்றுநோய் பதிவக அறிக்கை) (2007-2011). Putrajaya.
Ministry of Health Malaysia. National Diabete Registry Report 1 (தேசிய நீரிழிவு பதிவக அறிக்கை 1) (2009-2012). Putrajaya.
Ministry of Health Malaysia. (2017). Yayasan Jantung Malaysia. Kuala Lumpur.
Sithambaranar, S. (2015). Siddhantha science – philosophy (சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் – தத்துவம்). Chennai: Naam Tamilar Publications.
Jagajothi. (2016). Postharvest medicine (அஞ்சறைப் பெட்டி மருத்துவம்). Chennai: Classic Publications.
Ramachandran, S, P. (2016). Chariot vehicle (தேரையர் வாகடம்). Chennai: Thamarai Publications.
Puliyur Kesigan. (2009). Tholkappiyam (தொல்காப்பியம்). Chennai: Paari Nilayam Publications.
Vasanthan, Manjai. (2017). Versatile ideas by proverbs (பழமொழி வழங்கும் பல்துறைச் சிந்தனைகள்). Coimbatore: Vijaya Publications.
Micheal Searus, P. (2017). Good medicines (நல்மருந்து). Coimbatore: Vijaya Publications.
Kothandam, K, M. (2015). We’re good doctors for ourselves (நமக்கு நாமே நல்ல மருத்துவர்). Chennai: Munnetram Publications.
Published
PDF Downloads: 1371