21-am katral karppittalil naavalkalait taluvi uruvaakkappadum tiraippadanggal oor aaivu [21-st century study on adaptation of novels in films]
21-ஆம் நூற்றாண்டு கற்றல் கற்பித்தலில் நாவல்களைத் தழுவி உருவாக்கப்படும் திரைப்படங்கள் ஓர் ஆய்வு
Keywords:
21-st Century Learning, novel, film, adaptation, 21-ஆம் நூற்றாண்டு கற்றல் கற்பித்தல், நாவல், தழுவல், திரைப்படம்Abstract
21st-century education is generally used to refer certain core competencies such as collaboration, digital literacy, critical thinking, and problem-solving that advocates believe schools need to teach to help students thrive in today's world. However, the idea of what learning in the 21st century should look like is open to interpretation and controversy. The quality of human capital is an important component for the country. In this case, teachers have to produce multitalented generation by their teaching skill in classroom. This article is aimed at scrutinizing the transformation across genre, that is from novels to films. Seen from the perspective of literature, this effort could increase the reading motivation. The adaptation of literary into film have to be analyse to improve thinking skills among students. In relation to this, the objective of this article is to analyse the changes of written form novel into visual form of film. The result of this adaptation shows that how far literary values are adapted into visual forms. The students get more interested to read a novel and visualise it into his own imagination. They will get various interesting elements befitting the needs of today’s generation on their 21-st century studies.
[21-ஆம் நூற்றாண்டு கற்றல் கற்பித்தலில் சமன்சீர் கொண்ட மாணவர்களை உருவாக்குவது ஓர் ஆசிரியரின் கடப்பாடாகும். ஆகையால், மாணவர்களின் சிந்தனைத் திறனைத் தூண்டும் கற்றல் கற்பித்தலின் வழி அவர்களின் உடல், உள்ளம், அறிவாற்றல் மற்றும் ஆன்மீகம் ஆகிய கூறுகளை ஆசிரியர்கள் செம்மைப்படுத்துவது சிறப்பாகும். விரைவான தொழில்நுட்ப மாற்றங்களைக் கண்டு வரும் இவ்வுலகில், எதனையும் உயர்ந்தச் சிந்தனைப் படிநிலையில் சிந்திக்கும் ஆற்றல்மிக்க ஒருவராக மாணவர்கள் இருத்தல் வேண்டும். அவ்வகையில் தொழில்நுட்ப வளர்ச்சியினால் அனைத்தையும் இலகுவாகக் கற்கும் முறைக்கு மாணவர்கள் பழக்கப்படுத்தப்படுகின்றனர். ஆகையால் இக்கால மாணவர்களிடையே புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் குறைந்து காணப்படுவது இவ்வாய்வின் சிக்கலாகிறது. இச்சிக்கலைக் களைய, ஆய்வாளர் எழுத்து படிவத்தைக் காட்சி படிவமாக்கும் தழுவல் முறையைக் கற்பிக்கும் அவசியத்தையும் அதன் ஒற்றுமை வேற்றுமைகளையும் இவ்வாய்வில் ஆராய்கிறார். மாணவர்களின் சிந்தனைத் திறனை, படக்காட்சிகள் எவ்வாறு துலங்கச் செய்கிறது என்பது இவ்வாய்வின் நோக்கமாகும். எழுத்தின் படிவம் காட்சிகளாகத் தழுவப்படும் போது ஏற்படும் மாற்றங்கள் மாணவர்களின் சிந்தனை ஆற்றலை இயங்க ஊக்குவிக்கும். அதனை கற்றல் கற்பித்தலில் கிரகிக்கும் ஆற்றலும் மாணவர்களுக்கு வளரும். அவ்வகையில், நாவலுக்கும் படத்திற்கும் நடுவே காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளை மாணவர்கள் அலசி ஆராய்வர். எனவே மாணவர்களிடையே சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்த இவ்வகையான இலக்கியம் மற்றும் தொழில்நுட்ப தழுவல் முறை பயனாக அமையும் என்பது இவ்வாய்வின் கண்டுபிடிப்பாகும்.]
References
Palanivelu, N. (2006). Centamiḻ kaṟpikkum muṟaikaḷ [Methods of teaching Senthamizh]. Tanjavur: Ayya Publication.
Roslan Baki. (2013). Kepintaran Daya Cipta Kemahiran Berfikir (1). Kuala Lumpur:
Buzan, T. (2005). The Untimate Book of Mind Maps, London, England: Thorson. Utusan Publications & Distributors Sdn. Bhd.
Balakrishnan, K. (2004). Ciṉimāviṉ ulakam [The world of cinema]. Chennai: Meera Publication.
Kamaraj, A. (2017). Miṉṉampalam.Com. https://www.minnambalam.com/k/
Nagagothi, A., & Muniisvaran, K. (2018). Importance of illustration drawings in short stories. Muallim Journal of Social Sciences and Humanities, 2(4), 295-301. Retrieved from https://mjsshonline.com/index.php/journal/article/view/75
Published
PDF Downloads: 1291