The effectiveness of short story teaching techniques for students [சிறுவர் சிறுகதை கற்பித்தலில் உத்திகளின் பயன்பாடு]

Authors

  • Kavetha, M.

Keywords:

Short Stories, Tamil School, Cognitive Theory of Multimedia, Theory of Creativity Development, Thinking Ability

Abstract

மலேசியத் தமிழ்க் கற்றல் கற்பித்தலில் இரண்டாம் படிநிலை மாணவர்கள் வழிகாட்டிக் கட்டுரை பகுதியில் படத்தைத் துணையாகக் கொண்டு சிறுகதை எழுதுவதில் பெருமளவில் சிக்கலை எதிர்க்கொள்கின்றனர். கற்பனைத் திறன் குறைந்து காணப்படுவதால் பெருமளவில் மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இச்சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர். ஆகவே, ஆய்வாளர் பணிப்புரியும் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஆறாம் ஆண்டு மாணவர்களான 25 பேரை இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டார்கள். கொடுக்கப்பட்ட படத்தை ஆராய்ந்து சிறுவர் சிறுகதை எழுதுவதே இந்த ஆய்வின் நோக்கமாகும். 2005ஆம் ஆண்டு ரிச்சர்ட் மேயர் அறிமுகப்படுத்திய Cognitive Theory of Multimedia learning எனும் உத்தியை முதலில் மாணவர்களுக்குக் குழுமுறையில் பயன்படுத்தப்பட்டது. படத்தின் வழியாக மாணவர்கள் மத்தியில் அகத்தூண்டலையும் சிந்தனைத் தூண்டலையும் உருவாக்கி சிறுகதை எழுதிட வழிவகுக்க இந்த உத்தி மேற்கொள்ளப்பட்டது. மேலும், குழுமுறை கலந்துரையாடலின் வழியாகக் கற்பனையாற்றலைப் பெருக்க முடியும் என முன்மொழியும் ‘Theory of creativity development Fisher 1943’ என்கிற உத்தியின் ஒரு பகுதியும் இவ்வாய்வில் இணைத்துக்கொள்ளப்பட்டது. பலவகையான படங்களை மாணவர்களிடம் குழுமுறையில் அளித்து அப்படத்தையொட்டி ஒரு சிறந்த தொடக்கத்தையும் முடிவையும் திட்டமிட வழிவகுக்க முடிந்தது. படத்தின் மூலமாக மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் ஒரு நடவடிக்கையாக இவை மேற்கொள்ளப்பட்டது. இவ்விரு உத்திகளையும் துணையாகக் கொண்டு ஒரு மாதக் காலக்கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மேற்கண்ட நடவடிக்கைகள் நடத்தப்பட்டது. ஆய்வின் இறுதியாக மாணவர்களுக்கு ஒரு படத்தைக் கொடுத்துச் சிறுகதை எழுத வைக்கப்பட்டது. பெரும்பாலும் மாணவர்களின் சிறுவர் சிறுகதைகள் கவரும் வகையிலான சிறந்த தொடக்கத்தையும் திருப்புமுனைமிக்க சிறந்த முடிவையும் கொடுத்து சிறுகதையை எழுதியிருந்தனர். அவற்றுள் மூன்று சிறந்த சிறுவர் சிறுகதைகளின் முடிவுகளை மட்டும் இந்த ஆய்வின் ஆதாரமாக முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், வினாநிரல் பகுப்பாய்வின் வழி மேற்கண்ட உத்திகள் மாணவர்களுக்குச் சிறுவர் சிறுகதை எழுத பெரிதும் உதவியது என அனைத்து மாணவர்களும் குறிப்பிட்டனர்.

Primary school students in Malaysia face problems in writing short stories. Therefore the researcher has been conducted a research on 25 students from the Tamil school he is teaching. The 'Cognitive Theory of Multimedia' method introduced by Richard Mayer is used in this research. This method is used by referring to the picture, where the students are guided to write a short story. In addition to it, the theory of creativity development (Fisher) is also used in the group discussions. Various pictures were presented to students in the groups and after more practice, they were able to lead to a better start and end in writing short stories. This was done as a move to encourage students' thinking ability. The above activities were conducted for selected students for a month. At the end of the study, a picture was given to students to write a short story. Overall the stories were written with best beginning and endings. Three best short stories are presented here as a proof of this study. Furthermore, students pointed out that the above techniques had greatly helped them to prepare the short stories.

References

Murthy, P. M. (2012). Improving imagination in children's short stories (சிறுவர் சிறுகதைகளில் கற்பனை வளம் மேம்படுத்த வேண்டும்). Thaimoli Newspaper 31.10.2017.

Jaffri Hanafi, (2014). Creativity through the First Module: Teachers generate or prevent the development of children's creativity (Kreativiti menerusi Modul Pertama:Guru menjana atau menghalangpPerkembangan kreativiti kanak-kanak). Jurnal Pendidikan (m/s 23-45)

Robert Fisher (2005) Teaching thinking and creativity and Developing creative minds and creative futures. http://www.marilenabeltramini.it/children/talking.pdf

Utusan Malaysia: Najib statement, (2012) Urusan Online: http://ww1.utusan.com.my/utusan/Rencana/20121229/re_01/Kemahiran-berfikirdalam-pendidikan

Lynda Baloche, (2017). Co-operative learning: exploring challenges: Jurnal of Education or Teaching.

http://www.tandfonline.com/doi/full/10.1080/02607476.2017.1319513

லீடியா எடிக், (2007). தமிழ்வழிக் கற்றல் கற்பித்தலில் புதிய உத்திகள் பாகம் 6. சென்னை: கலைஞன் பதிப்பகம்.

Mayer, (2005). COGNITIVE THEORY OF MULTIMEDIA LEARNING (MAYER): HTTPS://WWW.LEARNING-THEORIES.COM/COGNITIVE-THEORY-OF-MULTIMEDIA-LEARNING-MAYER.HTML

Published

2018-01-08
Statistics
Abstract Display: 244
PDF Downloads: 533

Issue

Section

Original Articles

How to Cite

Kavetha, M. (2018). The effectiveness of short story teaching techniques for students [சிறுவர் சிறுகதை கற்பித்தலில் உத்திகளின் பயன்பாடு]. Muallim Journal of Social Sciences and Humanities, 2(1), 94-106. https://mjsshonline.com/index.php/journal/article/view/22