Usage of Tamil proverbs in Malaysians’ Tamil information medias [மலேசியத் தமிழ் தகவல் ஊடகங்களில் பழமொழியின் பயன்பாடு]

Authors

  • Pathamavathy, P.

Keywords:

Tamil Proverb, folklore, spoken literature, colloquial, information media, radio, newspaper

Abstract

ஒரு துறையில் அல்லது ஒரு செயலில் பாமர மக்களின் அனுபவ உண்மையால் தோன்றிய மொழிகள் பழமொழிகள் எனப்படும். அம்மொழிகள் பல ஆண்டுகள் அழியாமல் நின்று பயன்படும் காலத்தில்தான் பழமொழி எனும் பெயரினைப் பெறுகின்றன. பழமொழிகள் நாட்டுப்புற இலக்கியமாகவும், வாய்மொழி இலக்கியமாகவும் அறியப்படுகிறது. இது பேச்சு வழக்கிலும் நூல் வழக்கிலும் பயன்படுத்தப்படுகிறது.  பழமொழியின் தோற்றத்திற்கு மக்களின் அறிவு, பண்பு, தொழில், வாழ்வியல் மூலங்களாக அமைகின்றன. மனிதன் ஒழுக்க நெறிகளுக்குக் கட்டுப்பட்டு, துறை சார்ந்த அறிவுடன், , பண்பாட்டு முதிர்ச்சியுடன்,சமுதாயத்தோடு ஒன்றி வாழ்ந்திட பழமொழிகள் வழிகாட்டுகின்றன. மலேசியத் தமிழர்களிடையே பழமொழிகள்  இன்னும் புழக்கத்தில் இருந்து வருவதற்கான முதன்மைக் காரணம் தமிழ்ப்பள்ளிகளே ஆகும். மறுபுறம் மக்களிடையே அதிக செல்வாக்குடைய நாளிதழும் வானொலியும் எந்த அளவுக்குப் பழமொழிகளைப் பயன்படுத்தி வருகின்றன என்பதே இவ்வாய்வின் முதன்மை நோக்கம். ஆய்வின் முடிவாக இவ்விரு தகவல் ஊடகங்களும் பழமொழி பயன்பாட்டில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பது தெரியவருகின்றது. இருந்த போதிலும், இவ்விரு தகவல் ஊடகங்களின் பொருப்பாளர்களும், பங்கேற்பாளர்களும் மொழிப்பற்றோடு சற்று முனைப்புடன் செயல்பட்டால் இப்பிரச்சனையிலிருந்து விடுபடலாம். பழமொழிகளை நன்கு பேசிப் பழகி பயன்படுத்தும் ஆற்றல் உடைய மூத்தோர்களின் வழிகாட்டலும் இங்கு தேவைப்படுகிறது.

An adage that originated through the experience of the illiterate people from a particular field or activity is what we call as ‘proverbs’. A proverb is only classified as one if it has been widely used and applied throughout ages. Therefore, Tamil proverbs are often known as folklore or spoken literature. It is also used in colloquial and written works. People’s knowledge, culture, work and norms are the main sources for its existence. Proverb guides a man to live in the society with moral ethics, community knowledge and cultured maturity. Tamil schools seem to be the reason for these adages to exist and stand still among the Malaysian Tamils, till date. The major purpose of this research is to figure out the frequency of the proverbs used in information medias such as reputed radio stations and daily newspapers. The result of this study showed that the use of proverbs through both of these conventional medias are very rare. However, this issue can be handled if the authority, workforce, and participants of these two medias initiate a solution together, with devotion for the language. The guidance from the elderly people whom use proverbs well to communicate should also be found to make this possible.

References

Muralitharan, A. K. (1994). Proverbs and concepts (பழமொழிகளும் கருத்துகளும்). Chennai: R.R. Publication.

Muthukumaran. (2000). Proverbs 5000 (பழமொழிகள் 5 000). Chennai: Sangkar Publication.

Ilampuranar description (இளம்பூரணனார் உரை). (2011). Tolkapiyam: Porulathikaram. Chennai: Malligai Publication.

Kumaraguru, M. (2004). Puducherry region proverb (புதுச்சேரி வட்டாரப் பழமொழிகள்). Puducherry: Department of Tamil Studies, Puducherry University.

Vijila Jasmine Flower, P. (2004). Proverbs and social development ideas: Kumari District (பழமொழிகளும் சமூக வளர்ச்சி சிந்தனைகளும்: குமரி மாவட்டம்). Manonmaniyam Sundaranar University.

Pulavar Senthurai Muthu. (1965). Proverb and culture (பழமொழியும் பண்பாடும்). Chennai: Malligai Publication.

Murasu Nedumaran. (2007). Tamil Language and Tamils in Malaysia (மலேசியத் தமிழரும் தமிழும்). Chennai: World Tamil Research Center.

Published

2018-04-08
Statistics
Abstract Display: 244
PDF Downloads: 557

Issue

Section

Original Articles

How to Cite

Pathamavathy, P. (2018). Usage of Tamil proverbs in Malaysians’ Tamil information medias [மலேசியத் தமிழ் தகவல் ஊடகங்களில் பழமொழியின் பயன்பாடு]. Muallim Journal of Social Sciences and Humanities, 2(2), 119-128. https://mjsshonline.com/index.php/journal/article/view/24