Tuundutalil maarupaaddinai eerpaduttuvathan muulam maanavarkalin kavanattai uyarththutal: oru sootanai aaivu
தூண்டுதலில் மாறுபாட்டினை ஏற்படுத்துவதன் மூலம் மாணவர்களின் கவனத்தை உயர்த்துதல்: ஒரு சோதனை ஆய்வு [EFFECT OF STIMULUS VARIATION ON ENHANCING STUDENTS’ ATTENTION]
Keywords:
Stimulus variation, attention, pre-test, treatment, post-test and academic achievement.Abstract
ஒரு மனிதனை வளம் உள்ளவனாக மாற்றுவதற்குப் போடுகின்ற மூலதனந்தான் கல்வி. கல்விக்கு இடப்படுகின்ற மூலதனம் மனிதர்களை வளமுள்ளவர்களாக மாற்றி, அவர்களை ஆற்றல் உள்ளவர்களாகவும் தனி வருமானத்தையும் வாழ்க்கைத்தரத்தையும் நாட்டின் வருமானத்தை உயர்த்தி பிறகு நாட்டையே உலகில் முன்னணியில் நிறுத்துவது என்கின்ற அடிப்படையில்தான் கல்விக்காக அரசாங்கம் இத்தனை கல்வி நிறுவனங்களையும் உருவாக்கி இலட்சக்கணக்கான பணியிடங்களையும் உருவாக்கி ஆசிரியர்களை நியமனம் செய்து கோடிக்கணக்கான ரூபாயைச் செலவிட்டுக் கொண்டுருக்கிறது. அப்படிச் செலவிடுகின்ற இந்தப் பணத்திற்கு நாம் நல்ல பலனை உருவாக்கியாக வேண்டும். இந்த நோக்கத்திற்காகவே இந்த ஆய்வுக்கட்டுரை தூண்டுதலில் மாறுபாட்டினை ஏற்படுத்தி இதன் மூலம் மாணவர்களின் கவனத்தை ஈர்த்து அவர்களின் தேர்ச்சியில் மேம்பாடு அடையச் செய்வதை அடிப்படைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இந்த ஆய்வில் தூண்டுதலில் மாறுபாடு என்பது தனித்த காரணியாகவும் மாணவர்கள் மேம்பாடு என்பது சார்புக் காரணியாகவும் அமைந்துள்ளது. இந்த ஆய்வில் ஒந்றைக் குழு ஆய்வுச் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதற்காக ஒரு வகுப்பில் 50 மாணவர்களை மாதிரிகளாகத் தேர்ந்தெடுத்து 7 பிரிவுகளாகச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வுக்கான தகவலைப் பெறவேண்டி தூண்டுதலில் மாறுபாடு மற்றும் மாணவர்களின் மேம்பாடு பற்றிய தகவல் தொகுப்பை உருவாக்கி அவற்றைத் தர்ப்படுத்தி மதிப்பீடு செய்து ஆய்வுக்காலமான ஆறு வாரங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆய்வுக்கு முன் நடத்திய சோதனைத் தேர்விலும் ஆய்வுக்குப்பின் நடத்திய சோதனைத் தேர்விலும் பெறப்பட்ட புள்ளியியல் தகவல்களைத் தொகுத்து, பகுப்பாய்வு செய்து ஆராய்ந்ததில் தூண்டுதலில் மாறுபாடு ஏற்படுவதன் மூலம் மாணவர்களின் கவனத்தைக் கூட்டி அவர்களை மேம்பாடு அடையச் செய்யலாம் என்பது ஆய்வு முடிவின் மூலம் உறுதியாகியுள்ளது.
The present article highlights the stimulus variation techniques on enhancing the students attention. In this study stimulus variation is the independent variable and enhancing student’s attention and academic achievement are the dependent variables. Based on some advantages of experimental research, the study has adopted single group experimental design for the present investigation. This study consists of seven experimentation phases. 30 X – standart students were taken as a sample. Two tools were developed and validated to assess the stimulus variation, students attention and achievement. The tools were administered throughout the experimental period of 6 weeks. The data for stimulus variation, attention and achievement on pre and posttests were collected and computed for statistical analysis. The findings revealed that there was significant mean difference between the pre-test and post-test scores of the experimental group and there was on enhancing student’s attention as well as in their academic achievement due to the application of stimulus variation techniques
References
Padmini Devi, K. P. & Saravanakumar, AR. (2017). Cognitive dissonance, locus of control, self -efficacy and academic performance of novice teachers. Indian Journal of Research, 6(2), 28-31.
Neethi Perumal, M. & Saravanakumar, AR. (2017). Rational reflective thinking of Dr.Radhakrishnan for prospective teacher. International Journal of Scientific Research. 6(11), 59-60.
Saravanakumar, AR. & Subbiah, S. (2012). Efficacy of cognitive training strategies (CTS) on oral English acquisition. Journal of Golden Research Thoughts, 1(VI), 1-3.
Saravanakumar, AR. (2007). Enhancing attention of stimulus variation – An experimentak study. Journal of EDUTRACKS, 7(3), 32-33.
Saravanakumar, AR. & Mohan, S. (2007). Effect of stimulus variation on enhancing students’ Attention. Meston Journal of Research in Education, 6(1), 1-3.
Kalimuthu, S. & Saravanakumar, AR. (2018). Parents attitude towards learning orientation of students at higher secondary level. International Journal of Scientific Research, 7(1), 44-45.
Published
PDF Downloads: 244