Thinking skills in Tamil language form 3 textbook and their implementation in secondary schools [படிவம் 3 தமிழ்மொழிப் பாடநூலில் சிந்தனைத் திறனும் அதன் அமலாக்கமும்]

Authors

  • Sharamini, S. Kedah, Malaysia

Keywords:

Thinking Skills, Tamil language, Textbook, Implementation, Teaching and Learning

Abstract

இவ்வாய்வு இடைநிலைப்பள்ளி தமிழ்மொழிப் பாடநூலில் இணைக்கப்பட்டுள்ள சிந்தனைத் திறனையும் அதன் அமலாக்கத்தையும் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்டது. படிவம் 3 தமிழ்மொழிப் பாடநூலில் இடம்பெற்றுள்ள சிந்தனைத் திறன்களைக் கண்டறிந்து அதன் அமலாக்கத்தை ஆராய்வதே இவ்வாய்வின் கருதுகோளாகும். இவ்வாய்வுப் பண்புசார் மற்றும் அளவுசார் அணுகுமுறையைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. படிவம் 3 தமிழ்மொழிப் பாடநூலில் இடம்பெற்றுள்ள சிந்தனைத் திறன்களைக் கண்டறிவதற்கு ஆய்வாளர் குறிப்புகள் பகுப்பாய்வு முறையைப் பயன்படுத்தினார். சிந்தனைத் திறன்களின் அமலாக்கத்தை ஆராய்வதற்குக் கருத்தறிவினா மற்றும் நேர்காணல் ஆய்வுக் கருவியாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த ஆய்வுக்குப் பேராக் மாநில இடைநிலைப்பள்ளிகளில் பணிப்புரியும் 12 தமிழாசிரியர்கள் உட்படுத்தப்பட்டார்கள். பேராக் மாநில இடைநிலைப்பள்ளியில் தமிழ்மொழிக் கற்பிக்கும் 10 ஆசிரியர்களிடம் கருத்தறிவினா கேள்விகள் வழங்குவதன் வழியும் 2 ஆசிரியர்களிடம் நேர்காணல் நடத்துவதன் வழியும் ஆய்வுக்கான தரவுகள் சேகரிக்கப்பட்டது. இந்த ஆய்வு பேராக் மாநிலத்திலுள்ள இடைநிலைப்பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வின் முடிவில் இடைநிலைப்பள்ளி தமிழ்மொழிப் பாடநூலில் இணைக்கப்பட்டுள்ள சிந்தனைத் திறன்கள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் வலியுறுத்தப்படுகின்றது என்று கருத்தறி பார முடிவின் வழி தெரிகின்றது. இருப்பினும், கற்றல் கற்பித்தல் நடவடிக்கையின் பொழுது நேர பற்றாக்குறையின் காரணத்தினால் ஆசிரியர்களால் பாடநூலில் இணைக்கப்பட்டுள்ள சிந்தனைத் திறன்களை மாணவர்களுக்கு முழுமையாக வலியுறுத்த இயலவில்லை என்ற சிந்தனையும் நேர்காணல் நடத்தப்பட்ட ஆசிரியர்களின் கூற்றாக விளங்குகிறது. எனவே, பள்ளிகளில் பாடநூலில் உள்ள சிந்தனைத் திறன்கள் முழுமையாகக் கையாளப்பட வேண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

This study was conducted to identify thinking skills in Tamil language textbooks and their implementation in secondary schools. The purpose of this study is to determine the thinking skills contained in Form 3 Tamil language textbooks and their implementation in secondary schools. This study was carried out using qualitative and quantitative methods. The researcher used analytical methods to identify the thinking skills in Form 3 Tamil language textbooks. Questionnaires and interviews were used as research instruments to examine the application of the thinking skills. 12 Tamil language teachers currently teaching in secondary schools within the Perak state area were used as samples for this study. The data of this study were gathered via distribution of questionnaires to 10 teachers as well as interviewing two teachers who are teaching the Tamil language in Perak secondary schools. In conclusion, thinking skills in Tamil language textbooks can be emphasized during teaching and learning session in secondary schools. However, the teachers are unable to fully emphasize the thinking skills in the textbook during teaching and learning session due to time constraints. Thus, the study hopes that thinking skills from the textbooks can be fully applied in schools for daily teaching and learning session.

References

Ministry of Education Malaysia. (2012). Malaysia Education Plan Early Report 2013 – 2025 (Laporan Awal Pelan Pembagunan Pendidikan Malaysia 2013 -2025). Putrajaya.

Aisyah Sjahrony, Maimum Aqsha Lubis & Nik Mohd Rahimi Nik Yusoff. (2017). Importance of Textbook Readability in Education World (Kepentingan Kebolehbacaan Buku Teks dalam Dunia Pendidikan). Selangor: Universiti Kebangsaan Malaysia. Journal Islam and Tamadun, Volume 1(1), 29-30.

Malini, R. (2016). Futurism and implementation in secondary school Tamil textbook (இடைநிலைப்பள்ளி தமிழ்மொழிப் பாடநூலில் எதிர்காலவியலும் அதன் அமலாக்கமும்). Perak: Sultan Idris Education University. (Undergraduate Thesis)

Curriculum Development Division. (2003). KBSM Tamil language Syllabus (Sukatan Pelajaran Bahasa Tamil Kurikulum Bersepadu Sekolah Menengah). Ministry of Education Malaysia. Putrajaya.

Ministry of Education Malaysia. (2014). Higher order thinking skills application in school (Kemahiran berfikir aras tinggi aplikasi di sekolah). Curriculum Development Division, Putrajaya.

Published

2018-10-09
Statistics
Abstract Display: 96
PDF Downloads: 252

Issue

Section

Original Articles

How to Cite

Sharamini, S. (2018). Thinking skills in Tamil language form 3 textbook and their implementation in secondary schools [படிவம் 3 தமிழ்மொழிப் பாடநூலில் சிந்தனைத் திறனும் அதன் அமலாக்கமும்]. Muallim Journal of Social Sciences and Humanities, 2(4), 315-326. https://mjsshonline.com/index.php/journal/article/view/77